போர்த்துக்கல் தேஹோ பூங்காவின் சிறப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
தேஹோ பூங்கா
ஏறக்குறைய 90 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட தேஹோ பூங்கா, Tagus இன் வலது கரையில், Parque das Nações என்னும் தேசிய பூங்கா மற்றும் டிரான்காவோ நதியின் முகப்புக்கு இடையில் அமைந்துள்ள ஒரு பசுமையான இடமாகும். இதன் நீண்ட பசுமையான பகுதி, லிஸ்பன் மற்றும் லூரெஸ் நகராட்சிகளின் எழிலை எடுத்துரைத்து வரவேற்கின்றது. உயரமான செயற்கை மலைகளின் அமைப்பைக் கொண்ட இந்த பூங்கா, 1998ஆம் ஆண்டு லிஸ்பனின் பன்னாட்டுக் கண்காட்சியான "எக்ஸ்போ '98"விற்காக உருவாக்கப்பட்டது. தகோ ஆற்றின் முகப்பில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான ஒரு சிறப்புமிக்க இடமாகவும் இப்பூங்கா அமைகிறது. பல்வேறு விளையாட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் கல்வி நடவடிக்கைகள், சறுக்கு, வரிப்பந்து, குதிரை சவாரி என பல விளையாட்டுக்களுக்கான இடங்களை இப்பூங்கா உள்ளடக்கியுள்ளது. பெருநகர பூங்காவில், 4 கண்டங்களை அடையாளப்படுத்தும் எண்ணற்ற கண்கவர் மர வகைகள் உள்ளன. உலக இளையோர் தினக் கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சங்களுள் இரண்டு நிகழ்வுகளான இரவு நேர வழிபாடு, மற்றும் சிறப்பு திருப்பலி இங்கு நடைபெற்றன. ஒளிரும் உலோகக் குழாய்களால் மிக பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட இவ்விடம் காண்போர் கண்களை ஈர்க்கும் வண்ணம் 3,250 சதுர மீட்டர் பரப்பளவுடன் ஏறக்குறைய 40 டன்கள் எடையுடன் கூடிய திரைத்தொகுப்பு, ஒலி ஒளி அமைப்பு, நிழல் நாடக தயாரிப்பு அமைப்பு ஆகியவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்