தேடுதல்

விமானத்தில் செய்தித்தொடர்பாளர்களுடன் திருத்தந்தை விமானத்தில் செய்தித்தொடர்பாளர்களுடன் திருத்தந்தை 

செய்தித்தொடர்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

லிஸ்பன் உளூர் நேரம் மாலை 6.20 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 10.40 மணிக்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்தில் செய்தித்தொடர்பாளர்களைச் சந்தித்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 6.20 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 10.50 மணிக்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். இந்த 42ஆவது திருத்தூதூதுப் பயணத்தின் 5 நாள்கள் பற்றி பத்திரிக்கையாளர்கள் திருத்தந்தையிடம் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். பாத்திமா  திருத்தலத்தில் அமைதிக்காக செபித்தது, சிறார் மீதான பாலியல் முறைகேடுகள், தனது உடல் நிலை போன்ற பல கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை. உலக இளையோர் தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற சரியான முறையில் உதவிய மக்களுக்கும், தன் கருத்துக்களைக் கொண்டு சென்ற அனைத்து ஊடகப் பணியாளர்களுக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார் திருத்தந்தை    

திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள், தலத்திருவை, உலகம், மற்றும் நம்பிக்கையை நோக்கிய இளையோரின் கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை காண முடிந்த இந்த உலக இளையோர் தினக் கொண்டாட்டம் மகிழ்வையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது என்று எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பத்திரைக்கையாளர் ஒருவர், உலக அமைதிக்காக நீங்கள் பாத்திமா திருத்தலத்தில் பகிரங்கமாக செபிப்பீர்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்த வேளையில் எதற்காக அமைதியாக செபித்தீர்கள் என்ற கேள்விக்கு, அன்னை மரியாவிடம் அமைதிக்காக செபித்தேன் உலக விளம்பரத்திற்காக அல்ல என்று பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சமீபத்திய ஆய்வுகளின் படி போர்த்துக்கலில் ஏறக்குறைய 5000 சிறார் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்து சமூகத்தொடர்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், போர்த்துக்கலில் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களைத் தான் சந்தித்ததை எடுத்துரைத்து. ஏறக்குறைய 42 விழுக்காடு முறைகேடுகள் சொந்த இல்லங்களிலும் அதனைச் சுற்றியுள்ள அண்டைப் பகுதிகளிலும் வாழ்வோரால் ஏற்படுகின்றது என்பதைக் கண்டறிந்து தடுக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.  மேலும், பாஸ்டன் ஊழலுக்குப் பிறகு, தலத்திருஅவை சீரற்ற பாதைகளில் செல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ளது, எனவே  சிறார் முறைகேடுகளில் எவ்வித சமரசமும் செய்யாமல் துணிந்து முடிவுகளை எடுப்பதில்,  அதாவது  பூஜ்ய சகிப்புத்தன்மையை ஒவ்வொருவரிடத்திலும் வளர்த்துக்கொள்ள வேண்டும், அதற்கு தலத்திருஅவை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2023, 12:13