படைப்பின் மீது அக்கறை - உலக செப நாள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள படைப்பின் மீது அக்கறைக்கான உலக செபநாளில் அதனைக்குறித்து இதயப்பூர்வமாக செபிப்போம் என்றும், படைப்பின் அக்கறைக்கான இதயத்துடிப்புக்களைப் பற்றி சிந்திப்போம் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 31 வியாழன் அன்று மாலை மங்கோலியா நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தைத் தொடங்க உள்ள நிலையில் ஹேஸ்டாக் #SeasonofCreation என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
படைப்பு மீதான அக்கறை குறித்த நமது இதயத்துடிப்பு நமது அன்னையர் மற்றும் பாட்டிக்களின் இதயத்துடிப்பு, படைப்பின் இதயத்துடிப்பு கடவுளின் இதயத்துடிப்பு என்றும் அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 1, வெள்ளிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டு அக்டோபர் 4ஆம் தேதி அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவன்று நிறைவடையவுள்ள படைப்பின் மீது அக்கறைக்கான உலக செபநாளானது திருத்தந்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பலனளிக்கும் செயல்முறைகளுள் ஒன்றாகும்.
2015ஆம் ஆண்டில், படைப்பின் பராமரிப்புக்கான உலக செப நாளானது கத்தோலிக்க திருஅவையால் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையுடன் இணைந்து கொண்டாடப்பட்டு, இதன் வழியாக கிறிஸ்தவர்களை "சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு" அறிவுறுத்துகிறது.
2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நமது பொதுவான இல்லத்தின் பராமரிப்பு குறித்து, திருத்தந்தையின் இரண்டாவது திருமடல் Laudato si'யும் இதனை உரத்த குரலில் ஒலிக்கின்றது.
"நிச்சயமான மாற்றத்திற்கான" அறிவுரையாகவும், "பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் கவனித்துக்கொள்வதற்கான" உறுதிப்பாட்டையும் பொறுப்பையும் மனிதன் ஏற்றுக்கொள்ள இத்திருத்தூதுமடல் வலியுறுத்துகின்றது.
வறுமையை ஒழித்தல், ஏழைகள் மீதான கவனம், கோள்களின் வளங்களை அனைவருக்கும் சமமாக அணுகுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அர்ப்பணிப்பாக இத்திருமடல் திகழ்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்