லிபியா நாட்டிற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
லிபியாவின் கிழக்குப்பகுதியில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கால் பெரும் எண்ணிக்கையில் மரணங்களும் சேதங்களும் இடம்பெற்றுள்ளது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கல் தந்தியை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
லிபியாவிற்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Savio Hon Tai-Fai அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தந்திச் செய்தியில், இழப்புக்கள் குறித்த ஆழ்ந்த கவலையும், இறந்தவர்கள் மற்றும் தங்கள் உறவினர்களை இழந்து துன்புறுவோருக்கான செப உறுதியும் திருத்தந்தையால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கால் காயமடைந்துள்ளோர், தங்களால் அன்புகூரப்பட்டவர்கள் காணாமல் போயுள்ள நிலை குறித்த அச்சத்தில் இருப்போர், மக்களுக்கு உதவுவோர் என அனைவருடனும் திருத்தந்தை தன் ஆன்மீக நெருக்கத்தை வெளியிடுவதாகவும் அத்தந்திச் செய்தியில் கூறப்படுள்ளது.
செப்டம்பர் 11, திங்கள் கிழமை லிபியாவில் ஏற்பட்ட பெருமழையின் வெள்ளப் பெருக்காலும், இரு அணைகள் உடைந்ததாலும் இதுவரை 2000 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்