திருப்பயணத்திற்கு தயாரிப்பாக அன்னை மரியாவிடம் திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பிரான்சின் Marseille நகருக்கு இவ்வார இறுதியில் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளதையொட்டி தன் திருத்தூதுப் பயணத்தை அன்னை மரியாவின் கரங்களில் ஒப்படைக்கும் நோக்கத்தில் உரோம் நகர் புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வழக்கமாக ஒவ்வொரு வெளிநாட்டு திருத்தூதுப் பயணத்திற்கு முன்னரும் பயணம் முடிந்து வந்தபின்னரும் உரோம் நகர் அன்னை மரியா பெருங்கோவில் சென்று செபிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் பிரான்ஸ் நாட்டு Marseille நகரில் மேற்கொள்ள உள்ள திருத்தூதுப் பயணத்தையொட்டி செப்டம்பர் 19, செவ்வாய்க்கிழமையன்று மேரி மேஜர் பெருங்கோவில் சென்று செபித்தார்.
செப்டம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் உரோமிலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்த நாள் சனிக்கிழமை இரவு உரோம் நகர் திரும்புவார்.
வெள்ளிக்கிழமை மாலை, Marseille நகரில் மறைமாவட்ட குருக்களோடு இணைந்து மரியன்னை செப வழிபாட்டிலும், மதத்தலைவர்களுடன் ஆன சந்திப்பிலும் கலந்துகொள்வார்.
சனிக்கிழமையன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுடன் சந்திப்பு, மத்தியதரைக்கடல் பகுதி குறித்த கருத்தரங்கின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளல், பிரான்ஸ் அரசுத்தலைவர் Emmanuel Macronஐச் சந்தித்தல், Vélodrome அரங்கில் திருப்பலி நிறைவேற்றுதல் போன்றவைகளுக்குப் பின் சனிக்கிழமை இரவு உரோம் நகர் திரும்புவார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்