தேடுதல்

Steppe Arena  விளையாட்டரங்கம்  Steppe Arena விளையாட்டரங்கம்  

Steppe Arena எனும் விளையாட்டரங்கம்

தற்போதைய நவீன அரங்கமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 29, அன்று மங்கோலியாவின் அரசுத்தலைவர் உக்னாகியின் குரெல்சுக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான் 

பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இவ்வாறு தனது உரையினை ஆற்றிய திருத்தந்தை அனைவரையும் வாழ்த்தி அங்கிருந்து விடைபெற்றார்.

உள்ளூர் நேரம் காலை 11.00 மணிக்கு ஹன் திரையரங்கிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 14.7 கிமீ தூரம் காரில் பயணித்து திருப்பீடத்தூதரகம் வந்து  சேர்ந்தார். திருப்பீடத்தில் மதிய உணவினை முடித்த திருத்தந்தை சற்று இளைப்பாறினார். 

உலான்பாதர் உள்ளூர் நேரம் பிற்பகல் 3 மணியளவில் திருப்பீடத்தூதரகத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 16.7 கிமீ தூரம் காரில் பயணித்து Steppe Arena என்னும் மாளிகையை வந்தடைந்தார்.

Steppe Arena எனும் விளையாட்டரங்கம்

ஐஸ் பேலஸ் அதாவது பனி மாளிகை என்றும் அழைக்கப்படும் Steppe Arena மங்கோலியாவின் முதல் உட்புற பல்துறைசெயல்பாடுகளுக்கான பனி மாளிகையாகவும் பல்வேறு விளையாட்டுக்களுக்கான அரங்கமாகவும் விளங்குகின்றது. இரஷ்யா, சீனா, கனடா, அமெரிக்கா,ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டுத் திட்டத்தின் படி, 2019 ஏப்ரல் 14 அன்று புதிய யார்மாக்கில் இதன் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. பன்னாட்டு ஒலிம்பிக் விளையாட்டு தரங்களுக்கு இணையான விளையாட்டுப் போட்டிகளும் இங்கு நடந்துள்ளன. 95 தேசிய மற்றும் ஆறு வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்பையும் 1,600 க்கும் மேற்பட்ட நிபுணர்களின் உதவியையும் பயன்படுத்தி 23 கோடிக்கும் அதிகமான மங்கோலியன் துக்ரிக்குகள் இக்கட்டிடம் கட்ட செலவழிக்கப்பட்டன. தற்போதைய நவீன அரங்கமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 29, அன்று மங்கோலியாவின் அரசுத்தலைவர் உக்னாகியின் குரெல்சுக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. காலநிலையின் எந்த ஒரு பருவத்திலும் செயல்படக்கூடிய இந்த மாளிகையானது 7,800 சதுர மீட்டர் பரப்பளவில் 2,600 பேர் அமரும் திறன் கொண்டது; மேலும், 60 மீ × 30மீ பரப்பளவிலான பனிச்சறுக்கு மைதானம், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கான ஐந்து உடை மாற்றும் அறைகள், ஒரு நிலையான அவசர உதவி அறை, 80 முதல் 100 பேர் கூடுவதற்கேற்றார் போல் அறைகள், 1,000 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி, ஓர் உடற்பயிற்சிக்கூடம், ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி விளையாட்டு மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை போன்ற போட்டிகளை நடத்தும் இடமும் இங்குக் காணப்படுகின்றது. கலாச்சார மற்றும் கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மாநாடுகள் நடத்தப்படும் இடமாகவும் இது விளங்குகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2023, 11:47