தேடுதல்

மங்கோலிய மக்களுக்கு வாழ்த்தும் திருத்தந்தை மங்கோலிய மக்களுக்கு வாழ்த்தும் திருத்தந்தை 

திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி

செப்டம்பர் 4 திங்கள் கிழமை உலான்பாதர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 4 டுவிட்டர் குறுஞ்செய்திகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி

செப்டம்பர் 4 திங்கள் கிழமை உலான்பாதர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 4 டுவிட்டர் குருஞ்செய்திகளைத் தனது டுவிட்டர் பகக்த்தில் பதிவிட்டுள்ளார்.

கருணை இல்லம் என்னும் இரண்டு வார்த்தைகளில், திருஅவையின் வரையறை உள்ளது. இதயத்தை அன்பால் நகர்த்தும், அன்பை உணர்த்தும் ஒரு வரவேற்பு இல்லமாக இருக்கும் திருஅவை என்னும் இறைவனின் இல்லத்தில் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக இருக்க வேண்டும் என்று மென்மையான அன்பு கொண்ட இறைத்தந்தை விரும்புகின்றார் என்பதே திருத்தந்தையின் முதல் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

நாடுகளின் உண்மையான முன்னேற்றம் பொருளாதார செல்வத்தாலோ, ஆயுதங்களின் சக்தியில் அவர்கள் எவ்வளவு முதலீடு செய்கிறார்கள் என்பதனாலோ அளவிடப்படுவதில்லை. மாறாக, மக்களின் நலவாழ்வு, கல்வி மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை வழங்கும் திறனால் அளவிடப்படுகிறது என்பது திருத்தந்தையின் இரண்டாம் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

நல்லது செய்ய செல்வந்தர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக எப்போதும் சாதாரண மனிதர்களே மற்றவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக தங்கள் நேரத்தையும் அறிவையும் இதயத்தையும் அர்ப்பணிக்கிறார்கள் என்பது திருத்தந்தையின் மூன்றாவது குறுஞ்செய்தி வலியுறுத்தும் கருத்துக்களாகும்.

தனது நான்காவது டுவிட்டர் குறுஞ்செய்தியில் மங்கோலிய நாட்டு மக்களுக்கு தன் நன்றியினைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மங்கோலியாவின் சகோதர சகோதரிகளே, இந்த நாட்களில் நான் பெற்ற நட்பு என்னும் பரிசுக்கு நன்றி, பயர்லாலா! [நன்றி!]. கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும். நீங்கள் என் இதயத்தில் இருக்கிறீர்கள் தொடர்ந்து இருப்பீர்கள் எனக்காக தொடர்ந்து செபியுங்கள் என்பதே நான்காவது குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்,

திருத்தந்தையின் நான்கு நாள்கள் கொண்ட மங்கோலியாவுக்கான திருத்தூதுப் பயணமானது செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 4 திங்கள் கிழமையுடன் முடிவடைந்தது. இந்த 43ஆவது திருத்தூதுப் பயணத்தில் தலைநகர் உலான்பாதரில் உள்ள நாட்டின் அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கான உரை, புனித பேதுரு பவுல் பேராலயத்தில் உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்தார்க்கான உரை,  பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் மதத் தலைவர்களுக்கான உரை,  பனி மாளிகை எனபப்டும் விளையாட்டரங்கத்தில் மங்கோலிய மக்களுக்கான திருப்பலி மறையுரை, கருணை இல்லத்திறப்பு விழாவில் தொண்டுப்பணிகள் ஆற்றுவோர்க்கான உரை என 5 உரைகளை ஆற்றியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 43ஆவது திருத்தூதுப்பயண நிகழ்வுகள் நிறைவிற்கு வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2023, 11:07