தேடுதல்

மத்திய தரைக்கடல் கூட்டத்தில் பங்கேற்கும் இளையோர் மத்திய தரைக்கடல் கூட்டத்தில் பங்கேற்கும் இளையோர் 

மத்திய தரைக்கடல் கூட்டங்கள்

செப்டம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்ட இக்கூட்டமானது செப்டம்பர் 23 சனிக்கிழமை இக்கூட்டத்தின் நிறைவு அறிக்கை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தந்தை அவர்களின் திருப்பலியுடன் நிறைவுற உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மத்தியதரைக் கடலின் நம்பிக்கைக்கான ஒரு உறுதியான நம்பிக்கையையும் அடையாளத்தையும் உருவாக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் இக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. செப்டம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்ட இக்கூட்டமானது செப்டம்பர் 23 சனிக்கிழமை இக்கூட்டத்தின் நிறைவு அறிக்கை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தந்தை அவர்களின் திருப்பலியுடன் நிறைவுற உள்ளது. செப்டம்பர் 16 சனிக்கிழமை மாலை லா கார்தே மலையில் ஒரு கைவிளக்கு ஒளியில் பவனியும் மரியன்னை செபமும் நடைபெற்றது. துண்டு துண்டாக காயப்பட்ட கடலை "நம்பிக்கையின் மொசைக்", அதாவது உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பிறரன்புப் பணிகளுக்கான இடமாக மாற்றுவது பற்றி சிந்திக்க இக்கூட்டம் அழைப்பு விடுக்கின்றது. திருஅவையில் நடைபெற்று வரும் மத்திய தரைக்கடல் செயல்முறைக்கு மர்சேய்ல் கொடுக்கும் உற்சாகமான முயற்சியாக இது கருதப்படுகின்றது. பிரையன்கான் முதல் லாம்பதுசா வரையிலான புலம்பெயர்ந்தோரின் இடமாற்ற ஓட்டங்களுடன் இணைக்கப்பட்ட செய்திகளும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளன. மத்திய தரைக்கடலின் நிலையை நிரூபிக்க பலேர்மோ, துனிஸ், அலெப்போ, ஏதென்ஸ், சைப்ரஸ், ஒடெசா, டாங்கியர், அல்ஜியர்ஸ் போன்ற பகுதிகளின் இளையோர் 70 பேர் அப்பகுதி ஆயர்களுடன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். குடும்பங்களில் முடிந்தவரை சந்திப்புக்கும் சகோதரத்துவத்திற்கும் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட இம்முயற்சியில் பங்கேற்கும் 25 முதல் 35 வயதுடைய 70 மாணவர்கள் முறையே பத்து பிரஞ்சுக்காரர்கள் உட்பட, போஸ்னியா-ஹெர்ஸகோவினா, இத்தாலி, ஸ்பெயின், சிரியா போன்ற மத்தியதரைக் கடல் எல்லையில் உள்ள 25 நாடுகளில் இருந்து இளம் தொழில் வல்லுநர்களும் பங்கேற்கின்றனர். லெபனான், அல்ஜீரியா, உக்ரைன், கருங்கடல், அசோவ் கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்லாவிக் பகுதி சில நேரங்களில் மறக்கப்படுகிறது என்று இந்த  3வது மத்திய தரைக்கடல் கூட்டங்களைத் தொகுத்து வழங்கும் கர்தினால் ஜீன்-மார்க் அவெலின் அடிக்கடி நினைவுபடுத்துகிறார்.

உங்கள் வரலாற்றைப் பிரதிபலித்து சாட்சியாக இருங்கள்

ஒரு பிரெஞ்சு மொழி பேசும் அணியாகவும், ஒன்பது ஆங்கிலம் பேசும் அணிகளாகவும் பிரிக்கப்பட்ட 70 இளைஞர்கள், இந்த மூன்று நாள் சந்திப்புகளின் வழியாக தங்களின் அடையாளத்தையும், அவர்களின் வேறுபாட்டையும் எடுத்துரைப்பார்கள். மர்சேய்ல் மற்றும் மத்தியதரைக் கடலின் தனிப்பட்ட வரலாற்றைப் பகிர்ந்துகொள்வதன் வழியாக வரலாற்றை நினைவுபடுத்துதல், சமூக வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களிலும் உரையாடல், சுற்றுச்சூழல் மற்றும் புலம்பெயர்ந்த பிரச்சினைகள்,  பூமியின் துயரத்தின் அழுகையைக் கேட்பது என்பன போன்ற மூன்று தலைப்புக்களில் கலந்துரையாட இருக்கின்றனர். தாங்கள் வாழுகின்ற வாழ்க்கையையும் அதன் வரலாற்றையும் பிரதிபலித்து அதன் சான்றாக இருக்க இதன் வழியாக அழைக்கப்படுகின்றனர் இளையோர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2023, 11:06