தேடுதல்

மர்சேய்ல் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் முதல் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் மர்சேய்லுக்கு திருப்பயணம் மேற்கொள்ளும் முதல் திருத்தந்தை ஆவார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தந்தை ஐந்தாம் உர்பான், மற்றும் திருத்தந்தை ஏழாம் கிளமென்ட் மர்சேய்லில் உள்ள புனித விக்டர் துறவற இல்லத்தின் தலைவர்களாக இருந்தவர்கள். பிரெஞ்சு நாட்டைச் சார்ந்தவரான திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் உரோம் நகருக்குச் செல்வதற்கு முன் ஏறக்குறைய 12 நாள்கள் மர்சேய்லில் தங்கியிருந்தார். அவ்வகையில் 5 நூற்றாண்டுகள் கழித்து மர்சேய்லுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் முதல் திருத்தந்தையாக திருத்தந்தை பிரான்சிஸ் திகழ்கின்றார்.

இரண்டு நாள்களைக் கொண்ட இத்த்திருப்பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லா கார்தே  மரியன்னை திருத்தலத்தில் மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களைச் சந்தித்து தனது முதல் உரையினையும், புலம்பெயர்ந்தோர் நினைவிடத்தில் மதத்தலைவர்களுடனான சந்திப்பில் அவர்களுக்கு இரண்டாவது உரையினையும் ஆற்ற உள்ளார். செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை பலாய்ஸ் து பாரோ என்னுமிடத்தில் மத்திய தரைக்கடல் கூட்டங்களின் இறுதி நாளில் பங்கேற்று அவர்களுக்குத் தன் மூன்றாவது உரையினையும்  மாலையில் வெலோட்ரொம் அரங்கத்தில் திருப்பலியினையும் நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

திருத்தந்தையின் 44ஆவது திருத்தூதுப் பயணம் நல்ல முறையில் நடைபெற  தொடர்ந்து செபிப்போம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2023, 11:11