மர்சேய்லில் திருத்தந்தைக்கு வரவேற்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை மர்சேய்ல் உள்ளுர் நேரம் மாலை 4.04 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 7.34 மணிக்கு மர்சேய்ல் விமான நிலையத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விமான நிலையத்தில் பிரதமர் Élisabeth Borne அவர்களால் வரவேற்கப்பட்டார். மேலும் 4 சிறார் பாரம்பரிய உடையணிந்து மலர்கொத்து கொடுத்து திருத்தந்தையை வரவேற்றனர்.
மர்சேய்ல் உள்ளூர் நேரம் மாலை 4.04 மணியளவில் மர்சேய்ல் பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை பிரதமர் Élisabeth Borne, பிரான்ஸ் திருப்பீடத்தூதர் பேராயர் Celestino Migliore ஆகியோர் வரவேற்றனர்.
அரசு மரியாதையுடன் வரவேற்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின் விமான நிலையத்தில் உள்ள Hélène Boucher என்னும் அறையில் அவர்களை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்