தேடுதல்

ஜார்ஜியோ நாப்போலித்தானோ உடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஜார்ஜியோ நாப்போலித்தானோ உடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

ஜோர்ஜியோ நாப்பொலித்தானோ மறைவிற்கு திருத்தந்தை இரங்கல்

இத்தாலியில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசுத்தலைவரான நாப்பொலித்தானொ அவர்கள் தனது 98 வயதில் உரோமில் உள்ள Salvator Mundi மருத்துவமனையில் காலமானார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 22, 23 ஆகிய நாள்களில் 44ஆவது திருத்ஹ்தூதுப் பயணமாக பிரான்சின் மர்சேய்லில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவரான ஜோர்ஜோ நாப்போலித்தானோ என்பவரின் மறைவிற்கு இரங்கல் தந்தி ஒன்றினை அனுப்பியுள்ளார்.   

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை மாலை இறைப்பதம் சேர்ந்த இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவர் ஜோர்ஜியோ நாப்பொலித்தானோ அவர்களின் அவர்களின் ஆன்ம இளைபாற்றிக்காகத் தான் செபிப்பதாக இரங்கல் தந்தி ஒன்றினை அரசுத்தலைவரின் மனைவிக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசுத்தலைவரான நாப்பொலித்தானொ அவர்கள் தனது 98 வயதில் உரோமில் உள்ள Salvator Mundi  மருத்துவமனையில் காலமானார். நாட்டின் உண்மையான பணியாளர் என்றும் மனிதாபிமானமுள்ளவர் என்றும் அவரைக்குறித்து திருத்தந்தை அண்மையில் நடைபெற்ற புதன் மறைக்கல்வி உரையில்  கூறியுள்ளார்  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2023, 10:49