எத்தியோப்பியாவுக்கு திருத்தந்தையின் புத்தாண்டு வாழ்த்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
எத்தியோப்பிய நாட்டு மக்கள் அனைவரும் உடன்பிறந்த உணர்வுடன்கூடிய ஒப்புரவு மற்றும் அமைதியின் கொடைகளைப் பெறுவார்களாக என்ற வாழ்த்தை தன் டுவிட்டர் வழி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எத்தியோப்பிய மக்கள் செப்டம்பர் 12, செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கும் பாரம்பரிய புத்தாண்டையொட்டி அவர்களுக்கான வாழ்த்துச் செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மக்களுக்கும் தன் இதய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடன்பிறந்த உணர்வுடன் கூடிய ஒப்புரவையும் அமைதியையும் கொடைகளாகப் பெறுவார்களாக என்ற நம்பிக்கையை வெளியிடுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையர்களின் டுவிட்டர் பக்கம், அன்றிலிருந்து இன்றுவரை, திருத்தந்தையர்களின் விடுமுறைக்காலம் தவிர ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்