இறைநம்பிக்கை, சிறியோரிலும் தாழ்மைப்பண்புடையோரிலும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பெருமைக்குரிய உயர்ந்தவர்களிலும் அதிகாரமிக்கவர்களிலும் கடவுள் தன் நம்பிக்கையை வைப்பதில்லை, மாறாக, சிறியோரிலும் தாழ்மைப்பண்புடையோரிலும் அதனை வைக்கிறார் என செப்டம்பர் 8, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னை மரியாவின் பிறப்புவிழாவான செப்டம்பர் 8ஆம் தேதி, அன்னை மரியாவை கௌரவிக்கும் விதமாக இவ்வார்த்தைகளை பயன்படுத்தி டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் அன்னை மரியாவை தேர்ந்துகொண்டதை இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே செப்டம்பர் 8ஆம் தேதியன்று, Zimbabwe நாட்டு ஆயர்களையும் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஐந்தாண்டிற்கு ஒருமுறை, உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டு புனித பேதுருவின் கல்லறையையும் தரிசித்து, திருத்தந்தையையும் சந்திக்கும் “ad Limina” சந்திப்பையொட்டி, Zimbabwe ஆயர்கள் வந்துள்ளனர்.
இதே நாளில், ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்தலோனே அவர்களும் திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்