தேடுதல்

இறைமக்களுக்கான கடிதம் குறித்த திருத்தந்தையின் உரை இறைமக்களுக்கான கடிதம் குறித்த திருத்தந்தையின் உரை   (Vatican Media)

கடவுளின் உண்மையுள்ள மக்களே திருஅவை!

கடவுளின் புனிதமான மற்றும் உண்மையுள்ள மக்களின் பெண் திருஅவையின் பிரதிபலிப்பாக விளங்குகின்றார், திருஅவை என்பது பெண்பால், அவர் ஒரு மனைவி, அவர் ஒரு தாய் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகளாவியத் திருஅவையை கடவுளின் உண்மையுள்ள மக்களாக நான் நினைக்க விரும்புகிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைமக்களுக்கான கடிதத்தின் முன்படிவம் உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் திங்களன்று வாசிக்கப்பட்டு அது கைதட்டலுடன் வரவேற்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25, இப்புதனன்று,  இறைமக்களுக்கான அக்கடிதம் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றியயபோது இவ்வாறு தெரிவித்தார்.

நான் திருஅவையை கடவுளின் உண்மையுள்ள மக்கள், துறவி மற்றும் பாவி, ஒரு மக்கள் கூட்டம் என்று நினைக்க விரும்புகிறேன், இயேசு, தம்முடைய திருஅவைக்காகப் பரிசேயர்கள், சதுசேயர்கள், எசனீயர்கள், முனைப்பார்வலர்  போன்று அவருடைய காலத்தின் எந்த அரசியல் திட்டங்களையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அவர் வெறுமனே "நீங்கள் என் மக்களாய்  இருப்பீர்கள், நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்" என்ற இஸ்ரயேல் மக்களின் பாரம்பரியத்தை எடுத்துக்கொள்கிறார் என்று விளக்கினார்.

ஆண்டவரின் முன்னிலையில் நடக்கும் இந்த எளிய மற்றும் தாழ்மையான மக்கள் திருஅவையாக இதனை நான் கருத விரும்புகிறேன் என்று கூறிய திருத்தந்தை, கடவுளிளுடைய மக்களின் எதார்த்தம் என்பது, 'குறைக்கப்படும்' பல கருத்தியல் அணுகுமுறைகள் மற்றும் திட்டங்களுக்குள் விழக்கூடாது என்பதற்காக நான் உண்மையுள்ள மக்கள் என்று சொல்கிறேன் என்றும், எடுத்துத்துக்காட்டினார் திருத்தந்தை.

இந்த உண்மையுள்ள மக்களின் குணாதிசயங்களில் ஒன்று அதன் தவறாமை என்று எடுத்துரைத்த திருத்தந்தை, தூய தாயாம் திருஅவை எதை நம்புகிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், திருஅவையின் ஆசிரியத்திற்குச் செல்லுங்கள், ஏனென்றால் அது உங்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பில் உள்ளது; ஆனால் திருஅவை எப்படி நம்புகிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், விசுவாசமுள்ள மக்களிடம் செல்லுங்கள் என்று அதற்கு விளக்கமளித்தார்.

கடவுளின் புனிதமான மற்றும் உண்மையுள்ள மக்களின் பெண் திருஅவையின் பிரதிபலிப்பாக விளங்குகின்றார் என்றும், திருஅவை என்பது பெண்பால், அவர் ஒரு மனைவி, அவர் ஒரு தாய் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2023, 14:25