திருஅவையின் சமூகக் கோட்பாடு குறித்த வெரோனா கொண்டாட்டம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருஅவையின் சமூகக் கோட்பாடு குறித்த ஆண்டுக் கொண்டாட்டங்கள் இத்தாலியின் வெரோனாவில் இடம்பெற்றுவருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமூக அளவில் சுதந்திரமாக செயல்படுதல் என்ற தலைப்பில் இடம்பெறும் 13வது ஆண்டுக் கொண்டாட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ளச் செய்தியில், ஒருவர் மற்றவருடன் நெருக்கத்தையும் தொடர்பையும் குறித்து நிற்கும் இக்கொண்டாட்டம், இதயத்தில் பாதுகாக்க வேண்டிய விடுதலையின் உள்ளார்ந்த வெளிப்பாட்டை காண்பித்து நிற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
சமூகத் தொடர்புச் சாதனங்கள் என்பவை, நம்மை சிறைப்பிடிக்கும் பொறியாக இல்லாமல், சுதந்திர மக்களின் ஒன்றிப்பைக் கட்டிக்காப்பதை தன் நோக்கமாகக் கொண்டுச் செயல்படவேண்டும் என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்