இறையியல் இன்றைய உலகத்திற்கான நற்செய்தியை விளக்க வேண்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் "Motu Proprio" எனப்படும் ஒரு சிறப்பு அறிக்கை வழியாக "Ad theologiam promovendam", அதாவது, இறையியலை வளர்ச்சியடையச் செய்வதன் நோக்கமாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறையியல் கல்விக் கழகத்தின் சட்டங்களைப் புதுப்பித்துள்ளார்.
நவம்பர் 1, இப்புதனன்று வெளியிட்ட இப்புதிய அறிக்கையில், இந்தப் புதுப்பித்தலை, 'துணிச்சலான கலாச்சார புரட்சி' மற்றும் ‘வெளிப்பாட்டின் ஒளியில் உரையாடுவதற்கான அர்ப்பணிப்பு' என்றும் அழைத்துள்ளார் திருத்தந்தை.
ஒன்றிணைந்த பயணம், மறைபரப்பு மற்றும் 'வெளியே செல்லும்' ஒரு திருஅவைக்கு ஓர் இறையியல் தேவை என்பதையும் இப்புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
1718-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி திருத்தந்தை 11-ஆம் கிளமெண்டால் திருச்சபை சட்டப்பட்டபடி இது நிறுவப்பட்டது. சுருக்கமான Inscrutabili-யுடன், இதன் இறையியல் கல்விக்கழகம், திருஅவை மற்றும் உலகத்தின் பணியில் இறையியலை வைப்பதை அதன் நோக்கமாகக் கொண்டிருந்தது. இது பல ஆண்டுகளாகக் குறிப்பிட்ட தொடர்புடைய இறையியல் கருப்பொருள்களை ஆராயவும் அவைகளை ஆழப்படுத்தவும் அழைக்கப்பட்ட அறிஞர்களின் குழுவாக உருவாகியுள்ளது.
ஆனால் இப்போது, திருத்தந்தையைப் பொறுத்தவரை, அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நெறிமுறைகளை, நமது காலத்தின் சூழலுக்கு ஏற்ப இறையியலை மாற்றுவதற்கான பொருத்தமான நேரமாகக் கருதி இந்த மாற்றங்களைக் கொணர்ந்துள்ளார் திருத்தந்தை.
ஒரு அடிப்படையான சூழ்நிலை இறையியல் தேவை என்று கூறியுள்ள திருத்தந்தை, ஆண்களும் பெண்களும் வாழும் அன்றாடச் சூழ்நிலைகளில், வெவ்வேறு புவியியல், சமூக மற்றும் கலாச்சார சூழல்களில் நற்செய்தியைப் படித்து விளக்குவதற்குத் திறன் கொண்டவராக விளங்கிட உதவ வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய சந்திப்புக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்
இறையியல் என்பது, வெவ்வேறு மரபுகள் மற்றும் வெவ்வேறு துறைகளுக்கு இடையே, வெவ்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் மற்றும் வெவ்வேறு மதங்களுக்கு இடையே உரையாடல் மற்றும் சந்திப்பின் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றும், அது நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் அனைவரையும் ஈடுபாடு கொள்ளச் செய்யவேண்டுமெனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தக் காரணத்திற்காக, இறையியல், நம்பிக்கையின் உண்மைகளை ஊடுருவி தொடர்புகொள்வதற்கும், இன்றைய மொழிகளில், உண்மைத்தன்மை மற்றும் விமர்சன விழிப்புணர்வுடன் இயேசுவின் படிப்பினைகளை எடுத்துச்செல்வதற்கும், பிற வகையான அறிவால் உருவாக்கப்பட்ட புதிய வகைகளைப் பயன்படுத்துவதற்கும் உதவ வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
ஆன்மிகம் கொண்டதாக இருக்க வேண்டும்
'சிந்தனையை மறுபரிசீலனை’ செய்வது என்ற தற்போதைய விவாதத்திற்கு, தன்னை ஞானத்தின் ஒரு ஒழுக்கமாக, ஒரு உண்மையான விமர்சன ஒழுக்கமாக காட்டுவதற்கு, இறையியல் செய்யக்கூடிய பங்களிப்பு உள்ளது என்று விளக்கியுள்ள திருத்தந்தை, இறையியல் என்பது நுண்மமாகவும் (abstract) கருத்தியல் ரீதியாகவும் இருக்கக்கூடாது, ஆனால், ஆன்மிகமாக இருக்கவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
மேய்ப்புப் பணிக்கான முத்திரைப் பதிக்க வேண்டும்
இதுதான் ஒரு புகழ்பெற்ற இறையியல் எனவும் நடைமுறையில், தன்னைப் பொறுத்தவரை, இறையியல் என்பது ஒட்டுமொத்தமாக, மேய்ப்புப் பணிக்குரிய ஒரு முத்திரையைப் பதிக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இறையியலின் பிரதிபலிப்பு என்பது மக்கள் தங்களைக் கண்டுபிடிக்கும் வெவ்வேறு சூழல்கள் மற்றும் உறுதியான சூழ்நிலைகளிலிருந்து தொடங்க வேண்டும் எனவும், நற்செய்தி அறிவித்தலை தூண்டவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்