தேடுதல்

சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை இழக்கும் குழந்தைகள்

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போர் மற்றும் வன்முறை சூழலில் பங்கேற்கவும் அதன்காயங்களை சுமக்கவும், சாட்சிகளாக மாறவும் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

குழந்தைகளின் கண்ணீருக்கு முன்னால் போர் மதிப்பற்றது என்றும், போர், வன்முறை மற்றும் மோதல்களால் குழந்தைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ அதில் பங்கேற்கக் கட்டாயப் படுத்தப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 20 திங்கள் கிழமை சிறப்பிக்கப்படும் உலகளாவிய குழந்தைகள் நாளை முன்னிட்டு இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் மற்றும் மோதல்களால் ஏராளமான குழந்தைகள் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை இழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை குழந்தைகள் வாழ்வதற்கான அடிப்படை உரிமை, உடல் மற்றும் மன ஒருமைப்பாடு ஆகியவற்றை போரினால் இழந்துள்ளனர் ? நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போர் மற்றும் வன்முறை சூழலில் பங்கேற்கவும் அதன்காயங்களை சுமக்கவும், சாட்சிகளாக மாறவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்? குழந்தைகளின் கண்ணீருக்கு முன் எந்த ஒரு போரும் மதிப்பற்றது என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2023, 13:32