தேடுதல்

தீராத நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தின் இண்டி கிரகரி தீராத நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தின் இண்டி கிரகரி   (Claire Staniforth and Dean Gregory)

இண்டி கிரகரியின் அடக்கச் சடங்கிற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் இறையரசு அவர்களுடையதே எனக் கூறிய இயேசு, குழந்தையின் மரணத்தால் துயருறும் அனைவருக்கும் ஆறுதல் வழங்குவார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தீராத நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தின் இண்டி கிரகரி என்ற எட்டுமாதக் குழந்தை, உயிர் காக்கும் மருந்துக்கள் நிறுத்தப்பட்டு உயிரிழந்த நிலையில், அக்குழந்தையின் அடங்கச்சடங்கின்போது தன் ஆழ்ந்த இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள இந்த இரங்கல் செய்தி, குழந்தை இண்டி கிரகரியின் மரணம் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிடுவதுடன், குழந்தையின் மரணத்தால் துயருறும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் திருத்தந்தையின் ஆன்மீக நெருக்கத்தையும் ஜெப உறுதியையும் வெளியிடுகிறது.

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் இறையரசு அவர்களுடையதே எனக் கூறிய இயேசு, இக்குழந்தையின் மரணத்தால் துயருறும் அனைவருக்கும் ஆறுதலையும், இழப்பைத் தாங்கும் பலத்தையும், அமைதியையும் வழங்குவாராக எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்த எட்டு மாதக் குழந்தை இண்டி கிரகரியின் உயிரைக் காக்க அவளின் பெற்றோரால் முன்னெடுக்கப்பட்ட சட்டப் போராட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், அனைத்து உயிர்காப்பு இணைப்புக்களும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி அகற்றப்பட்டு, இரண்டு நாட்களுக்குப்பின் 13ஆம் தேதி உயிர்துறந்தார்.

டிசம்பர் மாதம் முதல் தேதி இங்கிலாந்தின் Nottingham பேராலயத்தில் அம்மறைமாவட்ட ஆயர் Patrick McKinney தலைமையில் அடக்கத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதில் திருத்தந்தையின் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2023, 14:58