கர்தினால் THOMAS STAFFORD WILLIAMS மறைவிற்கு இரங்கல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கர்தினால் THOMAS STAFFORD WILLIAMS அவர்களின் இறப்பு ஆழ்ந்த வருத்தந்த்தை அளிக்கின்றது என்றும், நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கும் பெருங்கடல் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தனது மேய்ப்புப்பணிப் பங்களிப்பை அதிகமாக வழங்கியவர் அவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 23 சனிக்கிழமை திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு WELLINGTON உயர்மறைமாவட்ட ஆயர் PAUL MARTIN அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரங்கல் தந்திச் செய்தியானது அனுப்பப்பட்டுள்ளது.
கர்தினால் THOMAS STAFFORD WILLIAMS அவர்களின் இறப்பினால் வருந்தும் அருள்பணியாளர்கள் மற்றும் துறவற நிறுவனங்களுக்கு செபத்துடன் கூடிய ஆழ்ந்த அனுதாபங்களை வழங்கிய திருத்தந்தை அவர்கள் கர்தினால் WILLIAMS அவர்களின் ஆன்மா உயிர்த்த இறைவனில் ஆறுதலையும் அமைதியையும் பெற தான் செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து கர்தினாலும் வெலிங்க்டன் பேராயருமான 93 வயது தாமஸ் ஸ்டாஃபோர்ட் வில்லியம்ஸ் அவர்கள் டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை Waikanae உள்ள Charles Fleming ஓய்வுபெற்றோர் இல்லத்தில் இயற்கை எய்தினார்.
வெலிங்டனில் 1930 மார்ச் 20 அன்று பிறந்த கர்தினான் வில்லியம்ஸ் அவர்கள், 1959 டிசம்பர் 20 அன்று அருள்பணியாளராக அருள்பொழிவுபெற்றார். வெலிங்டனின் உயர்மறைமாவட்டப் பேராயராக 1979ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் நியமிக்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் 20 அன்று ஆயராக நியமனம் பெற்றார். 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 2,ஆம் நாள் கர்தினாலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2005 மார்ச் 21 அன்று ஆயர் பொறுப்பைத் துறந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்