தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

திருத்தந்தை : பராமரிக்கப்படாத உடல்நலம் பலவீனத்திற்கு ஆளாகிறது

மக்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ தீர்வுகளை நாட வேண்டும், அவர்கள் நலமாக இருக்கும்போதும் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வியாழன் அன்று சுகாதார மேலாண்மையில் நெறிமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கில் பங்கேற்றவர்களை சந்தித்தபோது, தன் சொந்த உடல்நிலையைப் பற்றிக் குறிப்பிடுகையில், தனக்கு நிமோனியா அல்ல என்றும், மிகக் கடுமையான மூச்சுக்குழாய் தொற்றிலிருந்து  மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஆரோக்கியம் வலுவானது மற்றும் பலவீனமானது என்றும், மோசமாகப் பராமரிக்கப்படும் உடல்நலம் பலவீனத்திற்கு ஆளாகிறது என்றும் குறிப்பிட்டு, இக்கருத்தரங்கின் தலைப்புக்கு  தனது பாராட்டுகளைத் தெரிவித்த திருத்தந்தை, மக்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ தீர்வுகளை நாட வேண்டும், அவர்கள் நலமாக இருக்கும்போதும் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

மருத்துவ மற்றும் மருந்தியல் தீர்வுகளைத் தேடுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது, ஆரோக்கியத்தின் நன்மையைப் பற்றி சிந்திப்பது மற்றும் குணப்படுத்துவது மட்டுமல்ல பாதுகாப்பதும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3வரை COP28 காலநிலை உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக துபாய்க்கு அப்போஸ்தலிக்க பயணத்தை மேற்கொள்ளவிருந்த திருத்தந்தை, அவரது மருத்துவர்களின் ஆலோசனையினைக் கருத்தில் கொண்டு செவ்வாய் மாலை பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2023, 14:59