தேடுதல்

பிரெஞ்சு கால் பந்து  விளையாட்டு வீரர் பெலே பிரெஞ்சு கால் பந்து விளையாட்டு வீரர் பெலே  (ANSA)

விளையாட்டு வீரர் பெலே கிறிஸ்தவ நற்பண்புகள் கொண்டவர்

நன்கு பயிற்சி பெற்ற விளையாட்டு என்பது, பல்வேறு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீர்ர்கள் மற்றும் மக்களுக்கு இடையே உண்மையான நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு

மெரினா ராஜ் - வத்திக்கான்

விடாமுயற்சி, நிலைத்தத்தன்மை, நிதானம் போன்ற விளையாட்டு நடவடிக்கைகளுக்குத் தேவையான பல நற்பண்புகள் கிறிஸ்தவ நற்பண்புகளின் ஒரு பகுதி என்றும், இத்தகைய கிறிஸ்தவ நற்பண்புகளை தனது வாழ்விலும் கடைபிடித்து வாழ்ந்தவர் பிரெஞ்சு விளையாட்டு வீரர் பெலே என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 29  வெள்ளிக்கிழமை பெலே என்றழைக்கப்படும் (Edson Arantes do Nascimento) பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரரின் முதலாண்டு நினைவை முன்னிட்டு Rio de Janeiro உயர் மறைமாவட்ட ஆயர்  கர்தினால் Orani João Tempesta அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நன்கு பயிற்சி பெற்ற விளையாட்டு என்பது, பல்வேறு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீர்ர்கள் மற்றும் மக்களுக்கு இடையே உண்மையான நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெலே உலக மக்களால் நன்கு அறியப்பட்ட ஒரு விளையாட்டு வீரராக இருந்தார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

விளையாட்டில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சிறந்து விளங்கியவர், நேர்மறையான பண்புகளைக் கொண்டவர் பெலே என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், புதிய தலைமுறையினர் விளையாட்டை, ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகப் பார்ப்பதற்கு அவரது வாழ்க்கை உதவுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் மக்களுக்கு இடையே உண்மையான நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது முதலாமாண்டு நினைவு நாளில் அவரது பிரிவினால் வருந்தும் அனைவருடன் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெலே (Pelé) என்றழைக்கப்பட்ட எட்சன் அரண்டெசு டொ நாசிமெண்டோ (Edson Arantes do Nascimento; 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று பிரேசிலில் பிறந்தவர். 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரரான இவர்,உலக அமைதிக்கான பரிசினை பெற்றவர். 22 ஆண்டு கால கால் பந்தாட்ட வாழ்வில் மொத்தம் 1282 (கோல்களை) முறை பந்தை வலைக்குள் தள்ளி சாதனை புரிந்தவர். கருப்பு முத்து என்று அழைக்கப்படும் அளவிற்கு விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வெற்றி பெற்றவர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2023, 11:33