பொருளாதாரத் துறையில் அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நமக்குப் பின் வரும் நம் எதிர்கால சந்ததியினருக்கும் கூட அவர்கள் தங்களின் பயணத்தைத் தொடர தேவையான ஆதாரங்களை உறுதிப்படுத்தும் விதத்தில் நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, திங்களன்று, பொருளாதாரத்திற்கான திருப்பீடத்துறை செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களைத் தனிப்பட்ட முறையில் வரவேற்று அவர்களோடு உரையாடிதன் காரணமாக அவர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இக்கடித்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்துறையில் அதிகளவிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து தற்போதைய சூழலை நோக்கும்போது, பொருளாதாரத் துறையில் அதிகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் கண்டுணர முடிகின்றது என்றும், இதற்காக, நீங்கள் ஒரு நுட்பமான மற்றும் கடினமான பணியை மேற்கொண்டதற்காக உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன் என்றும் உரைத்துள்ளார்.
இப்பணியைப் பொறுத்தளவில், ஒவ்வொரு சிக்கலையும் நிர்வகிப்பதில் பிரமாணிக்கமும் விவேகமும் உங்களுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் ஆகும், ஏனெனில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பல பொறுப்புகள் தவிர்க்கப்பட வேண்டிய சிறிய மற்றும் பெரிய தவறுகளின் ஆபத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
பிரமாணிக்கம் என்பது தவறான காரியங்களுக்கு ஒருபோதும் உடந்தையாக இல்லாமல் இருப்பது, பார்க்காதது போல் பாசாங்கு செய்யாமல் இருப்பது, திருப்பீடம் போன்ற ஒரு பணி சமூகத்தில் எழும் அந்த நட்பை ஏமாற்ற விரும்பாமல் இருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்