தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

மனித குடும்பத்தை மீண்டும் இணைக்க நமக்கொரு தாய் தேவை!

அன்னை மரியா நம் அனைவரையும் ஒன்றுதிரட்டி நமக்கு ஆறுதல் வழங்குகிறார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம்  வத்திக்கான்

இன்று நாம் 57-வது உலக அமைதி தினத்தை "செயற்கை நுண்ணறிவு மற்றும் அமைதி" என்ற கருப்பொருளுடன் சிறப்பிக்கின்றோம் என்றும், இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் நமது மனிதக் குடும்பத்திற்குச் சேவையாற்றவும், உடன்பிறந்த உறவுக்கான பாதைகளை உருவாக்க உதவவும் நாம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 1, புத்தாண்டின் முதல் நாளான இத்திங்களன்று, தான் வெளியிட்டுள்ள ஐந்து குறுஞ்செய்திகளில் முதல் செய்தியில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.

நமது காலத்தின் நாட்கள் அமைதியற்றவையாக இருக்கின்றன, நமது மனித குடும்பத்தை மீண்டும் இணைக்க ஒரு தாய் நமக்குத் தேவை. ஆகவே, நாம் ஒற்றுமையின் கட்டுனர்களாக விளங்கிட அன்னை மரியாவை உற்றுநோக்குவோம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, தன் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஒரு தாயாக நாம் அவளுடைய படைப்பாற்றலுடன் இதைச் செய்வோம் என்றும் தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

ஏனைய மூன்று குறுஞ்செய்திகளும், முன்பே, மறையுரை மற்றும் மூவேளை செப உரைகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள சிந்தனைகளையே பிரதிபலிக்கின்றன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2024, 14:12