Francesco அமைப்பின் தலைவராக பேராயர் Sorrentino மீண்டும் நியமனம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிரான்செஸ்கோ என்ற அமைப்பின் பொருளாதாரத்தைக் கவனிக்கும் பொறுப்பிற்கு, இத்தாலிய Assisi–Nocera Umbra–Gualdo Tadino, மற்றும் Foligno மறைமாவட்டங்களின் பேராயர் Domenico Sorrentino அவர்களை, மீண்டும் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 5 எனத் தேதியிடப்பட்டு, ஜனவரி 8, இத்திங்களன்று வெளியிடப்பட்ட இக்கடிதத்தில், பொருளியலறிஞர் லூய்கினோ புருனி மற்றும் செராஃபிகோ நிறுவனத்தின் தலைவர் Francesca di Maolo உட்பட இவ்வமைப்பின் பொருளாதார அமைப்புக் குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கும் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார் திருத்தந்தை.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்றைத்தை மேம்படுத்துவதற்கானத் திருப்பீடத் துறையுடன் இணைந்து, திட்டத்தின் நிறுவன வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதில் பேராயர் Sorrentino அவர்களின் பங்களிப்பை, திருத்தந்தையின் இந்த மறு நியமனக் கடிதம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பிரான்செஸ்கோ அமைப்பின் பொருளாதாரத்தை அதன் தொடக்க காலத்திலிருந்து நடத்தி வரும் திருஅவையுடனான சிறப்பு தொடர்பை இக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் திருப்பீடத் துறை, பாப்பிறை ஆசிரியம் மற்றும் திருஅவையின் சமூகக் கோட்பாடு தொடர்பான பிரச்சினைகளில் இவ்வமைப்பிற்குத் தொடர்ந்து உதவி செய்யும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இந்த அமைப்பின் நிறுவன மற்றும் நிர்வாக அம்சங்களை வடிவமைப்பதில் பல்வேறு உலகப் பகுதிகளைச் சேர்ந்த சுறுசுறுப்பான இளைஞர்களின் ஈடுபாட்டையும் ஒப்புக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்