தேடுதல்

உலக அமைதிக்காக மெழுகுதிரி ஏந்திய ஹங்கேரி மக்கள் உலக அமைதிக்காக மெழுகுதிரி ஏந்திய ஹங்கேரி மக்கள்  (AFP or licensors)

ஒவ்வொருவரும் அமைதியை உருவாக்குபவர்களாகச் செயல்பட அழைப்பு

போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்துவருவதும், பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும் மிகவும் கவலை தருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போரில் ஈடுபட்டுவரும் நாடுகளை நினைவில்கொண்டு, இவ்வாண்டின் ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் ஒவ்வொருவரும் அமைதியை உருவாக்குபவர்களாகச் செயல்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

57வது உலக அமைதி தினமான ஜனவரி முதல் தேதி நண்பகல் மூவேளை செப உரை வழங்கியபின் இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரில் ஈடுபட்டுவரும் உக்ரைன், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ராயேலை மறந்து விடாமல் அமைதி திரும்ப செபிப்போம் என கேட்டுக் கொண்டார்.

திருஅவையில் சிறப்பிக்கப்படும் 57வது உலக அமைதி தினத்தின்போது உரோம் நகரின் Sant'Egidio அமைப்பால் ஏற்பாடுச் செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கும், இத்தாலியின் Goriziaவில் ஏற்பாடுச் செய்யப்பட்ட அமைதி ஊர்வலத்திற்கும் தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்துவருவதும், பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும் மிகவும் கவலை தருவதாக உள்ளன என உரைத்த திருத்தந்தை, உலகில் அமைதி நிலவ அனைவரின் செபத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

உலகில் பல்வேறு பகுதிகளில் போராலும் பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்தில், "அனைத்து நாடுகளிலும் அமைதி" என்ற தலைப்பில் உரோம் நகரிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அமைதி தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடுச் செய்துள்ளது கத்தோலிக்க Sant'Egidio பிறரன்பு அமைப்பு.

உலகில் அமைதிக்காக உழைத்துவரும் MEAN எனப்படும், வன்முறையற்ற நடவடிக்கைக்கான ஐரோப்பிய இயக்கம், உக்ரைன் நாட்டில் அமைதிப் பணிகளையும் மனிதாபிமானப் பணிகளையும் ஆற்றிவருவது குறித்தும் தன் நன்றிகளை புத்தாண்டு தின நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

டிசம்பர் 31ஆம் தேதி மாலையில் இத்தாலியின் Gorizia நகரில் பேராயர் Carlo Roberto Maria Redaelli அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் இடம்பெற்றதையும் எடுத்தியம்பிப் பாராட்டினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2024, 16:09