தேடுதல்

ஜெனீவா மனித உரிமைகளுக்கான ஐ நா அவை ஜெனீவா மனித உரிமைகளுக்கான ஐ நா அவை  (AFP or licensors)

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்திற்கு மரியாதை

புதிய உரிமைகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள், பாலினக் கோட்பாட்டைப் போலவே அமைதியை மேம்படுத்துவதற்குப் பதிலாக பிளவுகளை ஏற்படுத்தும் கருத்தியல் காலனித்துவங்களை உருவாக்குகின்றன

மெரினா ராஜ் - வத்திக்கான்

அமைதியை  வளர்ப்பதற்குப் பதிலாக பிளவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் புதிய உரிமைகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளில் அடங்கியுள்ளன என்றும், மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்திற்கு அமைதியுடன் கூடிய மரியாதை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும், தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 13 சனிக்கிழமை வெளியிடப்பட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளான புதிய உரிமைகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள், கருத்தியல் காலனித்துவ நிகழ்வுகளுக்கு வழிவகுக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்திற்கு அமைதியுடன் கூடிய மரியாதையானது எதிர்பார்க்கப்படுகின்றது. எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாத புதிய உரிமைகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள், பாலினக் கோட்பாட்டைப் போலவே அமைதியை மேம்படுத்துவதற்குப் பதிலாக பிளவுகளை ஏற்படுத்தும் கருத்தியல் காலனித்துவங்களை உருவாக்குகின்றன என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2024, 10:41