ஆந்திராவின் கர்நூல் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இந்தியாவின் ஆந்திரபிரதேச கர்நூல் மறைமாவட்ட ஆயராக கார்மல் துறவுசபையின் அருள்பணி Johannes Gorantla அவர்களை பிப்ரவரி 27, செவ்வாய்க்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் கொரந்த்லா அவர்கள், உரோம் நகரில் கார்மல் துறவுசபையின் தெரசியானும் என அழைக்கப்படும் பாப்பிறை ஆன்மீக நிறுவனத்தோடு இணைந்த அச்சபை குருமடத்தின் அதிபராக இதுவரை பணியாற்றியுள்ளார்.
1974ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்த புதிய ஆயர் கொரந்த்லா அவர்கள், உரோம் நகரின் கிறகோரியன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர்.
இவர் 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி அருள்பணியாளராக அருள்பொழிவுச் செய்யப்பட்டார்.
2021ஆம் ஆண்டிலிருந்து உரோம் நகர் கார்மல் குருமட அதிபராக பணியாற்றி வருகிறார் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கர்நூல் ஆயர் கொரந்த்லா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்