வெனிஸ் நகர காட்சி வெனிஸ் நகர காட்சி  (AFP or licensors)

உலக கண்காட்சியில், மனித உரிமைகளை வலியுறுத்தும் திருப்பீடம்

உலகில் கலந்துரையாடல் கலாச்சாரத்தையும், மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் உலகக் கண்காட்சியில் அரங்கம் ஒன்றை திறக்க உள்ளது திருப்பீடம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வட இத்தாலியிலுள்ள வெனிஸ் நகருக்கு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதியன்று ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிஸ் நகரின் கத்தோலிக்க சமுதாயத்தை சந்திக்கச் செல்லும் திருத்தந்தை, அதன் ஒரு பகுதியாக, அந்நகரில் இடம்பெறவுள்ள 60வது அனைத்துலக கலைக் கண்காட்சி அரங்கையும் சென்று பார்வையிடுவார்.

இரண்டாட்டிற்கு ஒருமுறை இடம்பெறும் இந்த கலைக் கண்காட்சி அரங்கில் திருப்பீடமும் ‘என்னுடைய கண்களோடு’ என்ற தலைப்பில் ஏழை மக்களின் மனித உரிமைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் அரங்கம் ஒன்றை நிறுவ உள்ளது.

‘எல்லாப் பகுதிகளிலும் வெளிநாட்டவர்’ என்ற தலைப்புடன் வெனிஸில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை இடம்பெற உள்ள உலக கலைக் கண்காட்சியில், உலகில் கலந்துரையாடல் கலாச்சாரத்தையும், மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரங்கம் ஒன்றை திறக்க உள்ளது திருப்பீடம்.

வெனிஸில் இக்கண்காட்சி அரங்கிற்குச் சென்றுப் பார்வையிட உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெனிஸ் பெருமறைமாவட்ட விசுவாசிகளையும் சந்தித்து உரை வழங்க உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2024, 14:58