நற்செய்திக்காக துன்புறும் மக்களுக்காக ஒன்றிணைந்து செபிப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உலகின் பல்வேறு பகுதிகளில் நற்செய்திக்காக தங்கள் வாழ்வையே ஆபத்துக்குள்ளாக்கும் மக்களுக்காக ஒன்றிணைந்து செபிப்போம் என பிப்ரவரி 27, செவ்வாய்க்கிழமையன்று டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்திக்காக துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்காக செபிப்பதோடு, அவர்கள் தங்கள் மனவுறுதி மற்றும் மறைப்பணி பேரார்வத்துடன் திருஅவைக்கும் பெரும் ஊக்கமாக இருக்க வேண்டும் எனவும் இறைவேண்டல் செய்வோம் என தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2012ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தின் ஆங்கிலப்பிரிவில் பிப்ரவரி 27 வரை 5317 குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருத்தந்தையின் ஆங்கில டுவிட்டர் பக்கத்தை இதுவரை ஏறக்குறைய 1 கோடியே 86 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்