செபிக்கும் திருத்தந்தை செபிக்கும் திருத்தந்தை  (ANSA)

முன்னோக்கிச் செல்வதற்கான சக்தியை வழங்குவதாக இறைவேண்டல்

முன்னோக்கிச் செல்லவும், அச்சங்களை வெற்றிகொள்ளவும், கடவுள் தயாரித்துள்ள மீட்பை இருளிலும் காணவும் தேவையான சக்தியை இறைவேண்டல் வழங்குகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நாம் முன்னோக்கிச் செல்வதற்கான சக்தியை வழங்குவதாக இறைவேண்டல் உள்ளது என பிப்ரவரி 6ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் முன்னோக்கிச் செல்வதற்கும், அச்சங்களை வெற்றிகொள்வதற்கும், நமக்கென கடவுள் தயாரித்துள்ள மீட்பை இருளிலும் காணவும் தேவையான சக்தியை இறைவேண்டல் நமக்கு வழங்குகிறது என தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் மீட்பை நமக்கருகில் கொணர்வதும் இறைவேண்டலே என மேலும் அதில் எழுதியுள்ளார்.  

தற்போது திருஅவையில் இடம்பெற்றுவரும் இறைவேண்டல் ஆண்டையொட்டி, செப ஆண்டு என்ற ஹேஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2025ஆம் ஆண்டு ஜூபிலி ஆண்டிற்கு தயாரிக்கும் விதமாக இவ்வாண்டை செபத்தின் ஆண்டாக சிறப்பிக்குமாறு அழைப்புவிடுத்து இவ்வாண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செபவுரையின்போது ஜெப ஆண்டை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2024, 14:33