தேடுதல்

திருத்தந்தையுடன்  C-9 கர்தினால்கள் அவைக்கூட்டம் திருத்தந்தையுடன் C-9 கர்தினால்கள் அவைக்கூட்டம்  (ANSA)

வத்திக்கானில் C-9 என்னும் கர்தினால்கள் உயர்மட்ட அவை கூட்டம்

2013ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உலகின் பல்வேறு பகுதிகளின் கர்தினால்களுடன் C-9 உயர்மட்ட அவை உருவாக்கப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தைக்கு நிர்வாக விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கர்தினால்களைக் கொண்ட C-9 என்னும் உயர்மட்ட அவையின் கூட்டம் திருத்தந்தையின் பங்கேற்புடன் வத்திக்கானில் இடம்பெற்று வருகிறது.

பிப்ரவரி 5ஆம் தேதி, திங்களன்று துவங்கிய இந்த கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் பங்குபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முந்தையக் கூட்டம் கடந்த டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் இடம்பெற்றது. இந்த டிசம்பர் கூட்டத்தில், திருஅவையில் பெண்களின் இடம் மற்றும் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தவிர, உக்ரைன் மற்றும் புனித பூமியில் இடம்பெறும் மோதல்கள், சிறார் தவறாக நடத்தப்படல் போன்றவை குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

2013ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட C-9 கர்தினால்கள் உயர்மட்ட அவை, தற்போது, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், வத்திக்கான் நகர் நிவாகத்திற்கான பாப்பிறை அவையின் தலைவர் கர்தினால் Fernando Vérgez Alzaga, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ், காங்கோ குடியரசின் கின்ஷாசா பேராயர் கர்தினால் Fridolin Ambongo Besungu, அமெரிக்காவின் பாஸ்டன் பேராயர் கர்தினால் Seán Patrick O'Malley, இஸ்பெயினின் பர்ச்சலோனா பேராயர் கர்தினால் Juan José Omella Omella, கானடாவின் Québec பேராயர் கர்தினால் Gérald Lacroix, லக்ஸம்பர்க் பேராயர் கர்தினால் Jean-Claude Hollerich, பிரேசிலின் San Salvador de Bahia பேராயர் கர்தினால் Sérgio da Rocha ஆகியோர் உள்ளனர். இவ்வவையின் செயலராக இத்தாலிய ஆயர் Marco Mellino அவர்கள் உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2024, 14:28