தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ். 

திருத்தந்தையின் இன்றைய சந்திப்புக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

பிப்ரவரி 26 திங்கள்கிழமை காய்ச்சல் இல்லையெனினும் முன்னெச்சரிக்கையாக இன்றைய தனது சந்திப்புக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் தவிர்த்துள்ளார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

லேசான காய்ச்சல் காரணமாக பிப்ரவரி 26 திங்கள்கிழமை தனது நிகழ்வுகள் மற்றும் சந்திப்புக்களைத் தவிர்த்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 24 சனிக்கிழமை முதல் லேசான காய்ச்சல் காரணமாக தனது சந்திப்புக்களைத் தவிர்த்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரையினை வத்திக்கான் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்குவதைத் தவிர்க்கவில்லை.

பிப்ரவரி 26 திங்கள்கிழமை காய்ச்சல் இல்லையெனினும் முன்னெச்சரிக்கையாக இன்றைய தனது சந்திப்புக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் தவிர்த்துள்ளார் என திருப்பீடத்தகவல் தொடர்பகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை முதல் பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை வரை உரோம் மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் கர்தினால்களோடு இணைந்து, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் தியானம் செய்த திருத்தந்தை அவர்கள் வெள்ளிக்கிழமை மதியத்துடன் அதனை நிறைவு செய்தார்.

வழக்கமாக தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வத்திக்கான் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தியான சிந்தனைகளை வழங்கிவரும் கர்தினால் Raniero Cantalamessa அவர்கள் வழங்கிய முதல் வார தியானத்திலும் (பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.   

திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி

110வது உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கானக் கருப்பொருளாக, "கடவுள் தனது மக்களுடன் நடக்கிறார்" என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என்றும், நம் இதயக் கதவைத் தட்டும் இறைவனை புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளில் நாம் அடையாளம் காணவேண்டும் என்றும் தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2024, 11:51