தேடுதல்

திருச்சிலுவை திருச்சிலுவை  

இரண்டாம் உலகப்போர் காலத்தின் 16 மறைசாட்சிகள்

கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1945ஆம் ஆண்டு சோவியத் இராணுவ வீரர்களால் கொல்லப்பட்ட 15 அருள்சகோதரிகள் குறித்த விவரங்கள் புனிதர் பட்ட படிநிலைகளுக்கு ஏற்பு.

 

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜெர்மனியின் நாத்சி வதைப்போர் காலத்தில் கொல்லப்பட்ட அருள்பணியாளர் ஒருவர், இரண்டாம் உலகப்போரின்போது இரஷ்யாவில் கொல்லப்பட்ட 15 ஜெர்மன் அருள்கன்னியர்கள்  ஆகியோரின் மறைசாட்சிய வாழ்வையும், மூன்று வணக்கத்துக்குரியவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகள் குறித்த விவரங்களையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1945ஆம் ஆண்டு சோவியத் இராணுவ வீரர்களால் கொல்லப்பட்ட அருள்சகோதரி Christophora Klomfass மற்றும் அவரின் 14 உடன் சகோதரிகள் குறித்த விவரங்களையும், நாத்சி ஜெர்மனியில் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட அருள்பணி Max Josef Metzger  அவர்கள் குறித்த விவரங்களையும், 17 ஆம் நூற்றாண்டு மாரனைட் முதுபெரும் தந்தை வணக்கத்துக்குரிய Stephane Douayhy, ஸ்பானிய நாட்டு அருள்பணியாளர் வணக்கத்துக்குரிய José Torres Padilla, பிரான்ஸ் நாட்டின் வணக்கத்துக்குரிய Camillo Costa de Beauregard  ஆகியோர்களிடம் தனித்தனியாக வேண்டியதால் இடம்பெற்ற மூன்று புதுமைகள் குறித்த விவரங்களையும், புனிதர்பட்ட நிலைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் Marcello Semeraro அவர்கள் சமர்ப்பிக்க திருத்தந்தை பெற்றுக்கொண்டார். 

மேலும், ஏழு புதிய வணக்கத்துக்குரியவர்கள் குறித்த விவரங்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் சீரோமலங்கரா பேராயர் Geevarghese Thomas Panickaruveetil Mar Ivanios, பிரேசில் நாட்டின் அருள்பணி Liberio Rodrigues Moreira, குரோவேசியா நாட்டின் Antonio Tomičić,  அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்த Maria Alfinda Hawthorne, இத்தாலியின் Maddalena Frescobaldi Capponi, Angelina Pirini, Elisabetta Jacobucci ஆகிய எழுவரையும் புதிய வணக்கத்துக்குரியவர்களாக அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2024, 15:14