பெண் பெண்   (AFP or licensors)

ஆண்-பெண் சமத்துவம் போற்றுவோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, "பெண் தலைவர்கள்: ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி" என்ற தலைப்பில் உரோமையில் நடைபெற்ற மாநாட்டில் வாசிக்கப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அனைத்துலகப் பெண்கள் தினத்தைக் குறிக்கும் நிகழ்வொன்றிற்குச் செய்தியொன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்-பெண் சமத்துவம் மற்றும் மாண்பை பாதுகாக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் 8-ஆம் தேதி, நாளை வெள்ளியன்று கொண்டாடப்படும் அனைத்துலக மகளிர் தினத்திற்கு, மார்ச் 6, இப்புதனன்று, அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, பெண் தலைவர்கள்: ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி" என்ற தலைப்பில் உரோமையில் நடைபெற்ற மாநாட்டில் வாசிக்கப்பட்டது.

அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் மற்றும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் தூதரக அதிகாரிகள் கூட்டாக இணைந்து இக்கூட்டத்தை நடத்துவார்கள் என்பதை அறிந்து கொள்வதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது செய்தியில் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தன்னை பங்கேற்க அழைத்தமைக்காக அச்செய்தியில் நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, தான் பங்கேற்கமுடியாத நிலையில், இக்கூட்டத்தின் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் இறைவன் ஞானம் என்னும் கொடையை வழங்கிட இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2024, 14:40