தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

போரினால் துயருறும் மக்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன்!

இந்த இசை நிகழ்ச்சியை முனினின்று நடத்துவதற்காகவும், போரினால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு (மேற்குக் கரையில்) மனிதாபிமான உதவிகளை தாராளமாக வழங்க உதவும் அனைவருக்கும் நன்றி : திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போரினால் பாதிக்கப்பட்ட எத்தனையோ மக்களின் உயிர்கள், அழிவுகள், கண்ணீர் ஆகியவற்றின் பின்னணியில், உக்ரைனைப் பற்றியும், பாலஸ்தீனம், இஸ்ரேல் பற்றியும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 7, இவ்வியாழனன்று, உலகத்தின் தெற்குப் பகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் ஸ்பெயினில் உள்ள கத்தோலிக்கத் திருஅவையின் தன்னார்வத் தொண்டு நிறுவனமான Manos Unidas எனப்படும் சங்கம்,  'Cadena 100 por la paz'  அதாவது, 'அமைதிக்கான சங்கிலி 100' என்ற தலைப்பில் நடத்தும் இசை அரங்கு நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ள காணொளிக் காட்சி ஒன்றியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

போரின் பாதிப்புகளை நேரிடையாகக் கண்டு வருவதற்கும் அதில் துயருறும் அனைவருடனும் உங்களை முற்றிலும் இணைத்துக்கொள்வதற்காகவும் நன்றி  என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்த இசை நிகழ்ச்சியை முனினின்று நடத்துவதற்காகவும், போரினால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு (மேற்குக் கரையில்) மனிதாபிமான உதவிகளை தாராளமாக வழங்க உதவும் அனைவருக்கும் நன்றி என்றும் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2024, 14:22