இயேசு ஒருபோதும் தன் இதயத்தின் கதவை மூடுவதில்லை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நம்மைக் குற்றவாளிகள் எனக் குறித்துக்காட்ட இயேசு தன் விரலை எப்போதும் நம்மை நோக்கி நீட்டுவதில்லை என்றும், அவர் சிலுவையில் காட்டியது போல், நம்மை வாரி அணைத்துக்கொள்ள நம்மை நோக்கி தனது கரங்களை விரிக்கிறார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 22, இவ்வெள்ளியன்று, தான் வெளியிட்டுள்ள இரண்டு டுவிட்டர் குறுஞ்செய்திகளில் முதலாவது செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு ஒருபோதும் தன் இதயத்தின் கதவை மூடுவதில்லை என்றும், அதில் உள்ளே நுழைய அவர் எப்போதும் நம்மை அனுமதிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இயேசுவினுடைய இத்தகைய அன்பின் செய்தியை பரப்புவோம் என்றும், அது பாவங்களிலிருந்து நம் இதயங்களை விடிவிப்பதுடன், ஒருபோதும் மங்காது மகிழ்ச்சியுடன் நம்மை நிரப்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
உலகத் தண்ணீர் நாள் செய்தி
தண்ணீரை வாழ்க்கைக்கான ஆதாரமாகவும், அனைவரின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தக்கூடிய பரந்த நிதி ஆதாரங்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்கள் யாவும் ஆயுதங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றது என்று தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
மார்ச் 22, வெள்ளிக்கிழமை இன்று உலகத் தண்ணீர் நாளைச் சிறப்பிக்கும் வேளை, இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது உரையாடல் மற்றும் அமைதிக்கான முயற்சிகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்