தேடுதல்

வத்திக்கான் தூய பேதுரு அடிநிலக் கல்லறையில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் தூய பேதுரு அடிநிலக் கல்லறையில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

செபித்தல், செபிக்கக் கற்பித்தல் திருஅவையின் மிக முக்கியமான பணி

நம்பிக்கை என்னும் விளக்கை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டுசெல்லுங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

செபிப்பது, செபிக்க கற்பிப்பது ஆகிய இரண்டும் திருஅவையின் மிக முக்கியமான பணி என்றும், நம்பிக்கை என்னும் விளக்கை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டுசெல்லுங்கள் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் மாதத்தின் முதல் சனிக்கிழமையும் தவக்காலத்தின் இரண்டாம் வார இறுதியுமாகிய 02 சனிக்கிழமை ஹேஸ்டாக் செபம் என்ற  தலைப்பில் தனது கருத்துக்களை இவ்வாறு டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கை என்னும் விளக்கை செபம் என்னும் எண்ணெயால் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள். செபித்தல், செபிக்கக் கற்றுக்கொடுத்தல் போன்றவை திருஅவையின் தலையாய, மிக முக்கியமான பணி என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2024, 15:26