ஆயுதக்களைவுக்கும் அமைதிக்குமென இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இடம்பெற்ற ஊர்வலம் ஆயுதக்களைவுக்கும் அமைதிக்குமென இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இடம்பெற்ற ஊர்வலம்  (ANSA)

ஒருங்கிணந்த ஆயுதக்களைவை நோக்கி நாம் செல்ல வேண்டியது அவசியம்

திருத்தந்தை : புதிய மற்றும் அதிநவீன ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியின் அபாயகரமான விளைவுகளை நவீன மோதல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மரணத்தின் ஆயுதங்கள் நிரம்பியிருக்கும் இடத்தில் அமைதி என்பது சாத்தியமில்லை என்பதால், ஒருங்கிணந்த ஆயுதக்களைவை நோக்கி நாம் செல்ல வேண்டியது அவசியம் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய நவீன ஆயுதங்கள் மனித சமுதாயத்திற்கு ஏற்படுத்திவரும் பெரும் அச்சுறுத்தல் குறித்து மார்ச் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் தன் கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய மற்றும் அதிநவீன ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியின் அபாயகரமான விளைவுகளை நவீன மோதல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என கூறியுள்ளார்.

மேலும், மரணத்தின் கருவிகளாகச் செயல்படும் நவீன ஆயுதங்களின் அபாயகரமான விளைவுகளின் மத்தியில் அமைதிக்கு இடமில்லை என்பதால் ஒன்றிணைந்த ஆயுதக்களைவை நோக்கி நடைபோடுவோம் என்ற அழைப்பையும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தி வழி விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2024, 13:40