2021 மார்ச்சில் திருத்தந்தை ஈராக்கில் பயணம் மேற்கொண்டபோது 2021 மார்ச்சில் திருத்தந்தை ஈராக்கில் பயணம் மேற்கொண்டபோது  (AFP or licensors)

தாயின் கனிவிலிருந்து அமைதி பிறப்பெடுத்து தூண்டுதலைப் பெறுகிறது

இவ்வுலகை பாதுகாத்து உயிர் துடிப்புடையதாக ஆக்கவும், வாழ்வை ஒரு கொடையாக மாற்றவும் தேவையான சக்தியை பெண்கள் கொண்டிருக்கிறார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பெண்களிலிருந்து அமைதி பிறக்கிறது, அது தாயின் கனிவிலிருந்து பிறப்பெடுத்து தூண்டுதலைப் பெறுகிறது என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படும் அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களிலிருந்து, குறிப்பாக தாயின் கனிவிலிருந்து அமைதி பிறக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் அதே டுவிட்டர் செய்தியில், பெண்களே இவ்வுலகை மிகவும் அழகான இடமாக மாற்றுவதுடன், அதை பாதுகாத்து உயிர் துடிப்புடையதாக ஆக்குகிறார்கள், மற்றும், புதுப்பிக்கும் அருளை உட்புகுத்தி, அனைவரையும் ஒன்றாய்க் கொணர்வதை ஏற்று, நம் வாழ்வை ஒரு கொடையாக மாற்றும் சக்தியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் எட்டாம் தேதி இவ்வுலகம் சிறப்பிக்கும் உலக மகளிர் தினமானது, தொழிலாளர் இயக்கத்திலிருந்து உருவெடுத்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

முதன்முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்ட உலக மகளிர் தினம், 1917இல் இரஷ்ய பெண்கள் "உணவும் அமைதியும்" என்ற பெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கிய  மார்ச் 8ஆம் தேதியை  தனக்கான நாளாக எடுத்துக் கொண்டது.

2024ஆம் ஆண்டின் மகளிர் தினத்திற்கான கருப்பொருளாக 'பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்' என்பது எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான பரப்புரைக் கருப்பொருளாக 'அனைவரையும் உள்ளடக்கும் பணியை ஊக்குவிக்கவும்' என்பது எடுக்கப்பட்டுள்ளது, சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2024, 15:27