தேடுதல்

கொலோசியத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை (கோப்புப்படம்) கொலோசியத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை (கோப்புப்படம்)   (AFP or licensors)

புனித வெள்ளி சிலுவைப் பாதை சிந்தனைகளை வழங்கும் திருத்தந்தை

சிலுவைப் பாதையை உருவாக்கி, அவருடன் இணைந்து நடக்க அனுமதிக்கும் கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்தப்படும் வகையில் இந்நிகழ்வு அமையும் : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இவ்வாண்டு, புனித வெள்ளியன்று, உரோமை கொலோசியத்தில் நிகழவிருக்கும் திருச்சிலுவைப் பாதை சிந்தனைகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்க முடிவு செய்திருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 26, இச்செவ்வாயன்று, வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்தத் தகவலை தெரிவித்துள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், 'சிலுவைப் பாதையில் இயேசுவுடன் இறைவேண்டல்' என்ற கருப்பொருளில் இவ்வாண்டிற்கான சிலுவைப்பாதை, வரும் புனித வெள்ளியன்று இரவு 09.15  மணிக்குத் தொடங்கி நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

சிலுவைப் பாதையை உருவாக்கி, அவருடன் இணைந்து நடக்க அனுமதிக்கும் கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்தப்படும் வகையில் இந்நிகழ்வு அமையும் என்றும், அன்று கல்வாரியில் இயேசு அனுபவித்த துயரங்கள் இன்றைய சூழலுக்கு எவ்வாறு பொருந்தி நிற்கிறது என்று அதில் எடுத்துக்காட்டப்படும் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை மேலும் உரைக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளியன்று மாலையில் உரோம் நகரின் கொலோசியத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் திருச்சிலுவைப் பாதையில் பல்வேறு நபர்கள் சிந்தனைகளை எழுதிவந்த வேளை, இவ்வாண்டு திருத்தந்தை அவர்களே அனைத்துத் தலங்களுக்குமான சிந்தனைகளை வழங்குகிறார் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2024, 13:59