தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

இயேசுவின் அன்பே நம் வாழ்வை மாற்றுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசு தம்முடைய தூய ஆவியாரை நம் இதயங்களில் ஊற்றுகிறார். அவருடைய அன்பு நம்மை குணப்படுத்துகிறது மற்றும் மாற்றுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம்- வத்திக்கான்

இயேசுவிடமிருந்து நாம் பெறும் அன்பே நம் வாழ்க்கையை மாற்றியமைத்து, பிறரையும் அன்புகூரச் செய்யும் வலிமைபொருந்தியவர்களாக நம்மை மாற்றம் பெறச் செய்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு  நம்மை அன்பு கூர்ந்ததால் மட்டுமே நாமும் பிறரை அன்புகூர முடிகிறது, ஏனென்றால் அவர் தம்முடைய தூய ஆவியாரை நம் இதயங்களில் ஊற்றுகிறார். அவருடைய அன்பு நம்மை குணப்படுத்துகிறது மற்றும் மாற்றுகிறது என்றும் விளக்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2024, 12:11