தேடுதல்

காசாவில் இயேசு உயிர்ப்பு நாளில் காசாவில் இயேசு உயிர்ப்பு நாளில்  (ANSA)

நேர்மாறான நிலைகளிலிருந்து மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கை

நிறைவேறாத ஆசைகளின் விரக்திகள், நனவாக முடியா கனவுகள், இழக்கப்பட்ட நட்புகள் என பல்வேறு முரண்பாட்டு நிலைகளை சந்திக்கும் மனிதனுக்கு இயேசுவின் உயிர்ப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வாழ்வு என்பது முரண்பாடுகளால் நிறைந்து காணப்படலாம், இருப்பினும், உயிர்த்த கிறிஸ்து நம் அனைத்து நிலைகளிலிருந்தும் நமக்கு மீட்பளிப்பார் என்ற நம்பிக்கையை வழங்குகிறார் என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் இருக்கும் உலகக் கிறிஸ்தவர்களுக்கு ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமையன்று டுவிட்டர் குறுஞ்செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நிறைவேறாத ஆசைகளினால் உருவான விரக்திகள், நனவாக முடியாத கனவுகள், இழக்கப்பட்ட நட்புகள் என பல்வேறு நேர்மாறான நிலைகளை நாம் சந்திக்க வேண்டியிருந்தாலும், இதிலிருந்தெல்லாம் நாம் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையை இயேசுவின் உயிர்ப்பு நமக்கு வழங்குகிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இன்றைய செய்தியோடு சேர்த்து ஆங்கிலத்தில் மட்டும் 5,380 டுவிட்டர் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2024, 14:57