தேடுதல்

கடவுளின் கருணை நிறைப் பார்வை கடவுளின் கருணை நிறைப் பார்வை  (©paul - stock.adobe.com)

விசுவாசத்தை நமக்கு வழங்கும் இறைவனின் கருணைநிறைப் பார்வை

இறைவனின் கருணை பார்வை வழி கிட்டும் புதிய கண்கள், நம்மையும், பிறரையும், நாம் அனுபவிக்கும் அனைத்து சூழல்களையும் உற்று நோக்க உதவுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடவுள் நம்மை உற்றுநோக்கும் கருணை நிறைப் பார்வையிலிருந்தே விசுவாசம் என்பது பிறக்கிறது என ஏப்ரல் 26, வெள்ளியன்று வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் மீதான இறைவனின் கருணைநிறைப் பார்வையே விசுவாசத்தை நமக்கு வழங்குவதாக டுவிட்டர் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கருணைப்பார்வை நம் இதயங்களின் கடினத்தை மிருதுவாக்கி, நம் காயங்களை குணப்படுத்தி, நம்மையே உற்று நோக்க உதவும் புதிய கண்களை வழங்குகின்றது என கூறியுள்ளார்.

மேலும், இந்த கருணை பார்வை வழி கிட்டும் புதிய கண்கள்,  நம்மையும், பிறரையும், நாம் அனுபவிக்கும் அனைத்து சூழல்களையும், அதிலும், மிகவும் வலிதரும் சூழல்களையும் உற்று நோக்க உதவுகின்றன என கூறியுள்ளார் திருத்தந்தை.

இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டரோடு சேர்த்து இதுவரை திருத்தந்தையரின் ஆங்கில டுவிட்டர் பக்கத்தில் 5,400 டுவிட்டர் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தின் ஆங்கிலப் பிரிவை இதுவரை ஏறக்குறைய 1 கோடியே 85 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2024, 14:38