தேடுதல்

பிரிட்டன் கலைஞரின் படைப்பு பிரிட்டன் கலைஞரின் படைப்பு   (AFP or licensors)

பூமியைக் காக்கும் பாதுகாவலர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்

அழிந்து கொண்டிருக்கும் இப்பூமியைக் காக்கும் பாதுகாவலர்களாகவும் அதனை உருவாக்கும் கைவினைஞர்களாகவும் வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது சந்ததியினர் ஏராளமான இயற்கை செல்வ வளங்களை நமக்கு விட்டுச் சென்றிருந்தாலும் நாம் அதனைப் பாதுகாப்பதை அறிந்திருக்கவில்லை என்றும், இப்பூமியைக் காக்கும் பாதுகாவலர்களாகவும் அதனை உருவாக்கும் கைவினைஞர்களாகவும் வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 22 திங்கள் கிழமை சிறப்பிக்கப்படும் உலக பூமி நாளை முன்னிட்டு ஹேஸ்டாக் பூமி நாள் என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூமியின் பாதுகாவலர்களாக உருவாக நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நமது சந்ததியினர்  நாம் வாழ்கின்ற இந்த பூமியில் ஏராளமான மதிப்புமிக்க செல்வ வளங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் நாம் தாம் அந்த இயற்கையைப் பாதுகாப்பதை அறியாது இருக்கின்றோம். அமைதியை நாம் பாதுகாக்கவில்லை. நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியை, அழிந்து கொண்டிருக்கும் இப்பூமியைக் காக்கும் பாதுகாவலர்களாகவும் அதனை உருவாக்கும் கைவினைஞர்களாகவும் வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.       

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2024, 13:33