தேடுதல்

ஹாங்காங் கிறிஸ்தவ அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஹாங்காங் கிறிஸ்தவ அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

நாம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யவும் பணியாற்றவும் வேண்டும்!

நம்பிக்கையின் மறைசாட்சியம் நமது திருஅவையின் வரலாற்றில் எப்போதும் இருக்கிறது : திருத்தந்தை திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதால், ஒன்றித்துப் பணியாற்றுவதும், ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வதும் மிகவும் முக்கியமானது என்று கூறினார் திருத்தந்தை.

மே 22, இப்புதனன்று,  ஹாங்காங் கிறிஸ்தவ அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்றை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யவும் பணியாற்றவும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நம்மை கிறிஸ்தவர்களாக்கும் ஒரே திருமுழுக்கை நாம் பெற்றுள்ளோம் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு வெளியே எதிரிகள் பலரை நாம் கொண்டிருந்தாலும், இங்கே நாம் நண்பர்களாக ஒன்றித்திருக்கிறோம் என்றும் உரைத்தார்.

நான் எதிரிகள் என்று குறிப்பிட்டது, திருஅவையைத் துன்புறுத்தும் எதிரிகள் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையின் மறைசாட்சியம் நமது திருஅவையின் வரலாற்றில் எப்போதும் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

நம்மிடையே இரண்டுவிதமான திருமுழுக்குகள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, முதலாவது நாம் பெற்றுள்ள தண்ணீர் திருமுழுக்கு என்றும், இரண்டாவது, நாம் இயேசுவுக்காகப் பெறப்போகும் இரத்தத் திருமுழுக்கு, அதாவது, உயிர்த்தியாகம் என்றும் விளக்கினார்.

மேலும், எண்ணற்ற கிறிஸ்தவர்கள் நமது திருஅவைக்காகத் தங்கள் உயிரையே தற்கையளிப்பு செய்திருப்பதன் வழியாக, மறைசாட்சியம் என்றால் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2024, 12:34