தேடுதல்

அன்னை மரியா அன்னை மரியா  (Copyright (c) 2017 Renata Sedmakova/Shutterstock. No use without permission.)

மோந்தேவெர்ஜினே யூபிலி நிறைவுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

இத்தாலியின் மோந்தேவெர்ஜினே கோவிலுக்கு வரும் திருப்பயணிகள் அன்னை மரியாவின் அருளையும் ஆறுதலையும் பெற்றுச் செல்கின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மே மாதம் 19ஆம் தேதியன்று நிறைவுக்கு வரும் இத்தாலியின் மோந்தேவெர்ஜினே துறவுமடத்தின் ஜூபிலி ஆண்டையொட்டி பெனடிக்டன் துறவுசபைக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1124ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மோந்தே வெர்ஜினே அன்னை மரியா துறவுமடம் தன் 900மாம் ஆண்டைச் சிறப்பிப்பதையொட்டிய ஜூபிலிக் கொண்டாட்டங்களுக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவின் பழமையான புனித திருவுருவத்தை தாங்கி நிற்கும் இத்துறவுமட ஆலயம், பல  எண்ணற்ற விசுவாசிகளை திருப்பயணிகளாக தொடர்ந்து கவர்ந்து வருகிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோந்தே வெர்ஜினே கோவிலுக்கு வரும் திருப்பயணிகள் அன்னை மரியாவின் அருளையும் ஆறுதலையும் பெற்றுச் செல்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

கடந்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி துவக்கப்பட்ட இந்த திருத்தலத்தின் 900மாம் ஆண்டு யூபிலிக் கொண்டாட்டங்கள் வரும் 19ஆம் தேதி பெந்தகோஸ்தே திருவிழா அன்று நிறைவுக்கு வருவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த நிறைவுக் கொண்டாட்டத்தில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் தன் பிரதிதிநிதியாக கலந்துகொள்வார் என்பதையும் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த யூபிலி ஆண்டுக் கொண்ட்டாட்டங்கள் வழி பெற்ற ஆன்மீக அருளின் உதவியுடன் திருப்பயணிகளுக்கும் விசுவாசிகளுக்கும் பெனடிக்ட் துறவு சபையினர் மேலும் செவையாற்றுவார்களாக என்ற ஆவலை வெளிப்படுத்தி, அன்னை மரியா மற்றும் புனிதர்கள் பெனடிக்ட், வில்லியம் ஆகியாரின் பரிந்துரையால் அவர்களின் பணிகள் சிறப்புடன் தொடர்வதாக என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2024, 14:53