தேடுதல்

ஜெனோவா மறைமாவட்ட இளையோர் திருத்தந்தையுடன் ஜெனோவா மறைமாவட்ட இளையோர் திருத்தந்தையுடன்  (Vatican Media)

உறுதிப்பூசுதலுக்கென தயாரித்துவரும் இளையோருடன் திருத்தந்தை

செபிப்பதற்கென்றே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாகக் கூறி, உறுதிப்பூசுதலுக்கு தயாரிக்கும் இளையோர் ஒவ்வொருவருக்கும் ஒரு செபமாலையை வழங்கினார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இத்தாலியின் ஜெனோவா மறைமாவட்டத்தைச் சேர்ந்த, உறுதிப்பூதல் என்னும் அருளடையாளத்தைப் பெற தயாரித்துவரும் இளையோரை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிக்கு வடகிழக்கேயுள்ள பழமையான ஜெனொவா  மறைமாவட்டத்தில் உறுதிப்பூசுதல் என்னும் அருளடையாளத்தைப் பெற தங்களைத் தயாரித்துவரும் ஆண்கள் பெண்கள் என ஏறக்குறைய 1000 இளையோரை திருப்பீடத்தில் சந்தித்து அவர்களுக்கு உரையென்று ஒன்றை வழங்காமல் அவர்களோடு நேரடியாக கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவர்களிடம் ஒரு பாடலைப் பாடும்படிக் கேட்ட திருத்தந்தை, இளையோர் வழக்கம்போலக் கூக்குரலிட்டு குழப்பம் செய்பவர்களாக இருப்பார்கள் என சிலர் சொல்கிறார்களே அது உண்மையா எனவும் வேடிக்கையாகக் கேட்டார்.

அவர்கள் வத்திக்கானுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின் நினைவாக ஒவ்வொருவருக்கும் ஒரு செபமாலையை வழங்கவிருப்பதாக அவர்களிடம் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அது செபிப்பதற்கென்றே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

செபிப்பதற்கு என்று இந்த உதவியை வழங்கும் தான், அவர்களுக்கென்று ஒரு சிறு பணியைக் கொடுப்பதாகவும், அந்த பணியானது, அவர்கள் பெற்றோரிடமும் தாத்தா பாட்டிகளிடமும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகும் எனவும் கூறினார் திருத்தந்தை.

பின், இத்தாலியின் ஜெனொவாவிலிருந்து வந்திருந்த இளையோருடன் இணைந்து அருள்நிறை மரியே செபத்தைச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2024, 17:16