தேடுதல்

திருஇருதய மருத்துவப்பணி துறவு அவையினர் மற்றும் புனித கமிலஸ் சபை சகோதரிகள் திருத்தந்தையைச் சந்திக்கின்றனர் திருஇருதய மருத்துவப்பணி துறவு அவையினர் மற்றும் புனித கமிலஸ் சபை சகோதரிகள் திருத்தந்தையைச் சந்திக்கின்றனர்   (Vatican Media)

சபையின் பாரம்பரியத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்திருங்கள்!

திருஇருதய மருத்துவப்பணி துறவு அவையினர் மற்றும் புனித கமிலஸ் சபை சகோதரிகளிடம், அவர்தம் சபைநிறுவுனர்களின் ஆன்மிக வாழ்வு, அர்ப்பணிப்பு, ஏழை எளியோரை உள்ளடக்கிய அவர்தம் உயிர்த்துடிப்புள்ள பணிகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி. அத்தகையதொரு எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்திட அவர்களுக்கும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அச்சமகற்றி, துணிவுடன் நம் காலத்தின் புதிய வகையான ஏழ்மைகளுக்கேற்ப உங்களையே கேள்விக்குட்படுத்தி சிறப்பாகப் பணியாற்றினால், உங்கள் சபைகளின் நிறுவுனர்கள் உங்களுக்கு விட்டுச்சென்ற பாரம்பரியத்தை இளமையாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் உங்களால் வைத்திருக்க முடியும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 23, இவ்வியாழனன்று, திருஇருதய மருத்துவப்பணி துறவு அவையினர் மற்றும் புனித கமிலஸ் சபை சகோதரிகள் 100 பேரை அவர்தம் பொதுப்பேரவைகளை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்து உரைநிகழ்த்தியபோது இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

அவர்களின் சபை நிறுவுனர்கள் எவ்வாறு தூய ஆவியாரின் செயல்பாட்டின்கீழ் தங்களையே முழுமையாக அர்ப்பணித்து அன்பின் மிகுதியால் அழைக்கப்பட்ட இடங்களிலெல்லாம் சென்று கணக்கிடாமால் பணியாற்றினார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

திருஇருதய மருத்துவப்பணி துறவு அவையினர் பணிகள் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, நோயாளர்கள், குடும்பங்கள், மருத்துவர்கள், சகோதரிகள், தன்னார்வப் பணியாளர்கள் மற்றும் பிறரையும் ஒரு 'சமூக' சூழலில் ஈடுபடுத்த முயற்சிப்பதன் வழியாக எல்லாரும் பயன்பெறும் பொருட்டு தங்கள் பணிகளைத் திறம்பட செய்வதாகத் தெரிவித்தார்.

நம் அனைவருக்கும் குணப்படுத்துதல் தேவை மற்றும், ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வது நமக்கு நல்லது, ஏனென்றால், இது உடலளவில் மட்டுமல்ல, உள்ளத்தளவிலும் நம்மைக் குணப்படுத்துகிறது என்பதை உண்மையில் நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2024, 14:38