ஒரு சிறுவனாக 'பாதை' திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒரு சிறுவனாக ஃபெலினியின் பல திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் “La strada” அதாவது, 'பாதை' என்ற திரைப்படம் என் இதயத்தில் நிலைத்திருக்கிறது என்றும், அந்தப் படம் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீருடன் முடிகிறது; கடற்கரையில் தொடங்கி கடற்கரையில் முடிகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
Federico Fellini-யின் 'La strada” திரைப்படத்தின் 70-வது ஆண்டு விழாவையொட்டி, ரிமினி திரைப்பட விழாவின்போது (மே 2-5) L'Osservatore Romano என்ற நாளிதழ் தயாரித்து வெளியிடவுள்ள சிறிய காணொளி காட்சி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அந்தத் திரைப்படத்தின் காட்சியொன்றை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பெண்ணின் வாழ்க்கையின் அர்த்தம் தரும் கல்லோடு புத்திபேதலித்தவனின் காட்சி என் இதயத்தில் நிலைத்திருக்கிறது என்றும், இந்த நினைவுவிழா நிகழ்ச்சி நடைபெறுவது எனக்கு நிறைந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்