மனத்தாழ்மை என்பது நமது கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாக உள்ளது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மனத்தாழ்மை என்பது நமது கிறிஸ்தவ வாழ்க்கையின் அடித்தளமாக உள்ளது. இது ஆணவத்திற்கு எதிரான மருந்து மற்றும் மோசமான துணை என்றும், ஆணவமும் வீண்பெருமையும் மனித இதயத்தை பாதிப்படையச் செய்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 22, இப்புதனன்று, தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆணவமும் வீண்பெருமையும் மனித இதயத்தை பாதிப்படையச் செய்யும் அதேவேளை, மனத்தாழ்மை விடயங்களை அவற்றின் சரியான பரிமாணத்திற்கு மீட்டெடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நமது நல்ல குணங்கள் மற்றும் குறைபாடுகளால், நாம் அற்புதமான ஆனால் அதேவேளையில், வரையறைக்கு உட்பட உயிர்களாக இருக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்